நான் நலம் யாவரும் நலமா

எல்லோரும் நலமுடன் இருக்க எல்லாம் வல்ல இறைவன் துணை

Saturday, April 3, 2010

மருத்துவர்கள்

     இப்பொழுது நம் மாநிலத்தில் பல இடங்களில் காவல் துறையினர் போலி மருத்துவர்களை கைது செய்து வருகின்றனர். நல்ல செய்தி. ஆனால் இது காலம் கடந்த செயல். பல வருடமாக இதுபோல போலி மருத்துவர்கள் குக்கிராமம், கிராமம்,நகரங்கள் பெருநகரங்கள் என்று பல்கி பரவியுள்ளனர். படிக்காத பாமர மக்கள் உள்ள குக்கிராமத்தில் இவர்கள் தான் கண் கண்ட தெய்வங்கள். ஏன் என்றால் கிராமத்திலே பிறந்து வளர்ந்து படித்து நகரத்தில் மருத்துவ கல்லூரியில் படித்து  பட்டம் வாங்கிய பிறகு கிராமத்தில் சென்று வைத்தியம் பார்க்க செல்ல மனம் இல்லை எனன்றால் அங்கு பணம் பண்ண முடியாது. இதனால் போலி மருத்துவர் காட்டுலே நல்ல மழை.
     போலி மருத்துவர், போலி மருந்து என்று கிராமத்தில் உள்ளவர்கள் மட்டும் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டும் அவர்கள் போடும் வோட்டு வேண்டும் ஆனால் அவர்களுக்கு எந்த  அரசும் ஒன்றும் செய்வதில்லை. சுதந்திரம் பெற்று பல வருடங்கள் ஆகியும் நாம் பல துறைகளில் வளர்ந்தும் இவர்களுக்கு மட்டும் விடிவு இல்லை. விவசாயம் ஆகட்டும் சுகாதாரம் ஆகட்டும் கிராம மக்கள் புறக்கணிக்க படுகிறார்கள்.
     ஏன் இந்த மாற்றந்தாய் மன போக்கு. அரசு மருத்துவம் படித்த மாணர்வகளை கட்டாயமாக இரண்டு வருடங்கள் கிராமத்தில் வேலை பார்த்த பிறகுதான் அவர்களை மருத்துவ கவுன்சிலில்  உறுபின்னர்களாக பதிவு செய்ய படவேண்டும். இஸ்ரேல போன்ற சிறிய நாட்டில் எல்லாம் மக்களுக்காக சட்டம் முலம் அதை செய்ய முடியும் பொது நம் போன்ற ஏழை நாட்டில் மட்டும் ஏன் செய்ய முடியவில்லை எல்லாம் வோட்டுக்காக. மாறவேண்டும் இந்த அவல நிலை. படித்த மருத்துவர்கள் ஒரு கணம் சிந்தித்தால் இது போல போலி மருத்துவர் மற்றும் மருந்துகள் ஒழியும். மாறுமா அவர்கள் மனம். காலம் தான் பதில் சொல்ல வேண்டும். அதுவரை இந்த மக்கள் நிலை ஆண்டவன் கையில்.

1 comment:

kuppusamy said...

அலொபதி மருத்தவர்கள் அவுஸ் சர்ஜின் முடித்த பின் கிராமத்தில் பணியாற்ற அவர்களே முன் வர வேண்டும். காவல்துறையினர் சித்தமருத்துவப்பட்டம் பெற்று கிராமத்தில் இருந்து மருத்துவம் செய்பவர்களையும் கைது செய்யப்படுவது கண்டிக்கத்தக்கது.