நான் நலம் யாவரும் நலமா

எல்லோரும் நலமுடன் இருக்க எல்லாம் வல்ல இறைவன் துணை

Wednesday, March 31, 2010

கோபத்தை அடக்கும் சில வழிகள்
1. சிறிதளவு கோபம் எற்படும் போதே பேச்சை நிறுத்திவிடவும்
2 அன்றாடம் ஒரு மணி நேரமாவது மௌனவிரதம் கடைபிடிக்கவும்
3 எப்பொழுதும் இனிய மென்மையான வார்த்தைகளை பேசிபழகவும்
4. கோபம் அதிகமாகும்பொழுது அந்த இடத்தை விட்டுக் கொஞ்சதுரம்
நடந்துவிட்டு வரவும்
5. குளிர்ந்த நீர் அருந்தவும்.
6. நாம் வணங்கும் குரு அல்லது கடவுள் உருவத்தை மனதில் நினைக்கவும்.
7. மனதிற்கு எரிச்சலை தரும் செய்திகளை தவிர்க்கவும்.
8. மனதில் நாமாவளியை சொல்லி கொள்ளவும் .
9. சைவ / சத்துவ உணவு மற்றும் சான்றோர் நடப்பு தேவை.
சிந்தனைக்கு சில
நமக்கு சிறந்த பாதுகாப்பு பொறுமைதான்
கோபம்தான் நம்மைத் துன்புறுத்தும் பகைவன்
தீய வழியில் வந்த செல்வம் பச்சை மண்குடத்து நீர்போல் நிற்காது
இறைஉணர்வு நம்மிடம் இடைவிடாமல் நிலவி நிற்கச் செய்வதுதான் தியானம் என்பது:
புனிதமான மனம் படைத்தவனுக்கு முக்தி எளிதில் கிட்டும்.
விரோத குணத்தால் (துவேஷம் )மனம் கெடுகிறது
துர்மந்திரிகளால் அரசன் கெடுகிறான்
உலக பற்றினால் துறவி கெடுகிறான்
செல்வம் கொடுத்து சீராட்டுவதால் புத்திரன் கெடுகிறான்
தீய செயல்களால் பிறவியே கெட்டுவிடுகிறது .